
ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டில் மது விற்க அனுமதிக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் மனு
சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகளில் மது விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
ஐடி ஊழியர் முரளிதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தோர் டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்துகின்றனர். டாஸ்மாக் நிர்வாகம் சில குறிப்பிட்ட மதுபானங்களை மட்டுமே விற்கிறது.
எனவே, மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும்.
மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் மதுபானங்களின் தரம் அதிகமாக உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது
