சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

தினகரன் வருகை… ஸ்லீப்பர் செல் அச்சம்… அதிமுக. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு

தினகரன் வருகை.. ஸ்லீப்பர் செல் அச்சம்…
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு தலைமைக் கொறடா பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானதாக உள்ளது. அதை மீறி நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரனின் உத்தரவுக்கு எதிராகவும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் சட்டசபையில் செயல்பட்ட வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை பாய்ந்தது.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரனே எம்.எல்.ஏ.யாகி சட்டசபைக்குள் வருகிறார். அவருக்கு ஏற்கனவே அ.தி.மு.க. கட்சியிலும், ஆட்சியாளர்களிலும் சிலீப்பர் செல் என்ற வெளிக்குத் தெரியாத ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சட்டசபையில் எழும் பிரச்சினைகளில் அப்படிப்பட்டவர்கள், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


அரசினர் தீர்மானங்களில் ஆளும் கட்சியில் உள்ள இப்படிப்பட்ட சிலீப்பர் செல் நபர்கள், ஒருவேளை அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டால், அது ஆட்சிக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.
எனவே அந்த நிலையை தவிர்க்கும் விதமாக அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் அனைத்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கும் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 8-ந் தேதி முதல் நடக்க இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், அரசு கொண்டுவரும் அரசினர் தீர்மானங்களில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் சிலீப்பர் செல் நபர்களுக்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

240 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன