
பா.ஜனதாவுக்கு அடிபணிவதை விட ‘சமூக நீதிக்காக மகிழ்ச்சியோடு சாவேன்’ – லாலு
லாலு பிரசாத்துக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நேற்று 3½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
அதைத்தொடர்ந்து லாலு பிரசாத் சார்பில் அவரது அலுவலகம் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது.
அதில் அவர், “எங்களைப் பின்பற்றி வாருங்கள் இல்லையேல் உங்களை குறி வைப்போம் என்ற பாரதீய ஜனதாவின் உத்தரவுக்கு அடிபணிந்து நடப்பதை விட, சமூக நீதிக்காக, நல்லிணக்கத்துக்காக, சமத்துவத்துக்காக என்னை நான் குறிவைத்துக் கொண்டு, மகிழ்ச்சியாக சாவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
375 Views
