
பல வெற்றி படங்களையும், பல வெற்றி இயக்குனர்களையும் தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் முலம் அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார்.
சமீப காலமாக விவசாயிகள் படும் துன்பங்களை கண்டு வருத்தமடைந்த சீ,வி.குமார் விவசாயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அயல்நாட்டு குளிர்பானங்களை இனி நானும் என் தயாரிப்பில் உருவாகும் படங்களின் போதும் உபயோகிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். நமது விவசாயிகளையும், விவசாயத்தின் மகத்துவத்தயும் காப்பது நம் கடமை என கூறிய சீ.வி.குமார் எடுத்திருக்கும் இந்த முடிவு பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான “அதே கண்கள்” படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.
