புதன்கிழமை, ஜூன் 10
Shadow

எட்டாவது நாள்… தீர்வை எட்டாமல் நீளும் போக்குவரத்து போராட்டம்… அரசின் அலட்சியமா…!

எட்டாவது நாள்… தீர்வை எட்டாமல் நீளும் போக்குவரத்து போராட்டம்… அரசின் அலட்சியமா…!

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் இன்று நல்ல முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒருசில தினங்களே உள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த தமிழகமும் இன்று வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றன. இன்றுடன் போராட்டம் எட்டாவது நாளை எட்டியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மனசாட்சியோடு முடிவு செய்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து ஒருசில மணி நேரத்தில் தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தற்போது போடப்பட்டுள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைத் திரும்ப பெற்றால் பணிக்குச் செல்ல தயார் என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியாகின.

ஆனால், போராட்டம் வாபஸ் பெறுவதாக எதுவும் அறிவிக்கவில்லை என்று தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். “23 தொழிற்சங்கங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. எங்களுடைய வாதத்தைச் சட்டப்படி நீதிமன்றத்தில் இன்று முன்வைக்கவுள்ளோம். இன்று நடைபெறும் விசாரணையை பொறுத்தே போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

பொதுமக்கள் மீது அக்கறை இல்லையா என்று தொழிற்சங்கங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். எங்களுக்குப் பொதுமக்கள் மீது அக்கறை உள்ளது அரசுக்குதான் இல்லை” என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

324 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன