
ப்ரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி முதலானோர் நடிக்கும் படம் ‘நிமிர்’. மலையாள ’மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட புரொடக்ஷன் வேலைகள் முடிந்து விட்ட நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றுள்ளது.
‘நிமிர்’ படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோகநாந்த் இசை அமைக்கும் இந்த படத்தில் இடம் பெறும் ‘நெஞ்சில் மாமழை…’ என்று துவங்கும் பாடலை சமீபத்தில் எ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ‘நிமிர்’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
