செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..!

‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..!

தமிழ் நடிகர்களில் கேரக்டருக்காக அதிகம் மெனக்கெடும் நடிகர்கள் ஒரு சிலர்தான். மேக்கப் போடுவதற்கே பல மணி நேரம் செலவழித்து அந்த கேரக்டராகவே மாறும் நடிகர்கள் வரிசையில் விஜய்சேதுபதியும் இணைந்து கொண்டார்.


கதைக்கு கதை வித்தியாச கேரக்டர்கள் தேர்வு செய்யும் விஜய் சேதுபதியின் இப்போதைய தேர்வு பாலாஜி தரணிதரணின் புதிய படமான சீதக்காதி.
மிக வித்தியாசமான கதைக்களமாக உருவாக உள்ள சீதக்காதியில் விஜய்சேதுபதி இளவயது 30, நடுத்தர வயது 50, முதிர்ந்த வயது 75 என 3 கேரக்டரில் நடிக்க இருக்கிறார். விஜய்சேதுபதிக்கு மேக்கப் போட ஹாலிவுட் பிரபல மேக்கப் கலைஞர் க்ரெக் கெனான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மேக்கப் போட்டதற்கு 3 முறை ஆஸ்கார் விருது வென்றவர்.

இந்த படத்தில் நாடக நடிகர் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. அதில் 75 வயது முதிர்ந்த தோற்றத்தில் விஜய்சேதுபதி அசத்தலாக இருக்கிறார். இந்த படம் விஜய்சேதுபதியின் சில்வர்ஜூப்லி படமாக அமைய உள்ளது.

498 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன