
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தேவர் ஆட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது கவுதம் கார்த்திக்கை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார். இப்படத்துக்கு ‘தேவர் ஆட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
மார்ச் முதல் வாரம் ‘தேவர் ஆட்டம்’ படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
ஒரு குறிப்பிட்ட வட்டாரம், சமூகத்தின் வாழ்க்கை முறையை தன் படங்களில் பதிவு செய்வது முத்தையாவின் வழக்கம். இந்த முறை ‘தேவர் ஆட்டம்’ என்றே தலைப்பு வைத்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
366 Views
