சனிக்கிழமை, மே 30
Shadow

‘தளபதி’யை தொடர்ந்து ‘கேணி’யில் இணைந்த கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி..!

ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக சஜீவ் பி.கே., ஆன் சஜீவ் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘கேணி’. ‘கிணறு’ என்ற பெயரில் மலையாளத்திலும் உருவாகியுள்ள இந்த படத்தை மலையாளத்தில் 7 படங்களை இயக்கியுள்ள எம்.ஏ.நிஷாத் இயக்கியுள்ளார். இவர் தமிழில் இயக்கும் முதல் படமான ‘கேணி’யில் நாசர், பார்த்திபன், பசுபதி, ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா, அர்ச்சனா, பிளாக் பாண்டி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

இந்த படத்தின் பாடல்களுக்கு மலையாள இசை அமைப்பாளர் எம்.ஜெயச்சதிரன் இசை அமைக்க, ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற பாடல்களை நடிகை சுஹாசினி வெளியிட்டார்.


இந்த படம் குறித்து இயக்குனர் எம்.ஏ.நிஷாத் கூறும்போது, ‘‘கேணி’ நான் இயக்கும் முதல் தமிழ் படம். நான் இதற்கு முன் இயக்கிய அனைத்து மலையாள படங்களும், சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை. அந்த வகையில் ‘கேணி’ திரைப்படமும் இந்த சமூகத்திற்கான ஒரு படம்தான்! எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக தண்ணீர் பிரச்சனை உருவெடுக்கும் என்று பல விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த பிரச்சனை சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘கேணி’யை உருவாக்கியுள்ளேன். காற்றை போல, வானம் போல, தண்ணீர் எல்லா உயிரனங்களுக்கும் பொதுவானது. அதற்கு உரிமை கொண்டாடவும், அணைகளை கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை’ என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம்’’ என்று சொன்ன இயக்குனர், எம்.ஏ.நிஷாத், ‘‘தளபதி’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் கே.ஜே.யேசுதாஸ் அவர்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களையும் இணைத்து ஒரு பாடலை பாட வைத்திருப்பதோடு படத்தில் அவர்களை நடிக்க வைக்கவும் செய்திருக்கிறேன்’’ என்றார்.

416 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன