சனிக்கிழமை, மே 30
Shadow

சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ டைட்டில் லுக்..!

‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ‘பூமராங்’ எனும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ஆர்.கண்ணன். அதர்வா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், உபென் பட்டேல், சுஹாசினி மணிரத்னம் ஆகியோரும் நடிக்கிறார்கள். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார் ஆர்.கே.செல்வா.

‘பூமராங்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை  சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தை இயக்குனர் கண்ணனே சொந்த பேனரில் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

337 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன