புதன்கிழமை, ஜூலை 15
Shadow

‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ எனது புத்தகத்தை படிக்காதீர்கள் – ஆ.ராசா

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையே, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா 2ஜி விவகாரம் தொடர்பான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நிலையில், 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி ஃபரூக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் புத்தகத்தின் முதல் பிரதியை ஃபரூக் அப்துல்லா வெளியிட ஆ.ராசா பெற்றுக் கொண்டார். ஹர் ஆனந்த் பதிப்பகம் சார்பில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பேசிய ஆ.ராசா, சிறையில் இருந்தபோது என் தரப்பு நியாயத்தை யாரும் கேட்காததால் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளேன். அரசியல் கண்ணாடி அணிந்து 2ஜி குறித்த எனது புத்தகத்தை படிக்காதீர்கள் என கேட்டுக் கொண்டார்.

422 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன