புதன்கிழமை, ஜூலை 15
Shadow

150 ஆண்டுக்குப்பின் நீல நிற சந்திர கிரகணம்;ஜனவரி 31-இல் பார்க்கலாம்…!

150 ஆண்டுகளுக்குப் பிறகு- அரிதான முழு சந்திர கிரகணம், ஜனவரி 31-ஆம் தேதி ஏற்படுகிறது. ‘நீல நிலா’ என்று அழைக்கப்படும் இந்த சந்திர கிரகணத்தை, வெறும் கண்களால் காணலாம்.

2018-ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு (super blue blood) நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி முதல் தேதியில் ஒன்றும், ஜனவரி 31-ஆம் தேதி மற்றொன்றுமாக சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்ற உள்ளது.

ஜனவரி 1-ஆம் தேதி பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. ஜனவரி 31-ஆம் தேதியன்று பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் என்பதால் நீல நிலா தோன்ற உள்ளது.

இது போல ஒரு நீலநிற சந்திரகிரகணம் கடைசியாக மார்ச் 31, 1866-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.2018-ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இது. ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது

ஜனவரி 31 ஆம் தேதியன்று மாலை 4 மணி 21 நிமிடத்தில் லேசாக பிடிக்கத் தொடங்கும் சந்திரகிரகணம் 6 மணி 21 நிமிடத்தில் முழுமையான கிரகணமாக உச்சமடைகிறது. இது 7 மணி 37 நிமிடம் வரை முழுமையாக நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் கண்களால் கிரகணத்தை காண முடியும். மெல்ல மெல்ல விடுபட்டு இரவு 9.38 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைகிறது. இது இந்த ஆண்டின் அரிய நிகழ்வாகும்.

மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழுமையாக தெரியும். அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா, ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். மற்ற வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்

முழு கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகத் தெரியும். மேல் விளிம்பு இருளாக இருக்கும். மொத்தமாக இந்த முழு சந்திர கிரகணம் 77 நிமிடங்கள் நிகழும் என ஸ்பேஸ் டாட்.காம் இணையதளம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினத்தில், நிலா பூமியின் மிக அருகில் இருக்கும். எப்போதும் காணப்படுவதை விட 30 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் வானில் தென்படும்.ஜனவரி 31 அன்று தோன்றவுள்ள நீல நிலா, இந்தாண்டின் முழு சந்திர கிரகணமாகும். அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028-இலும், அதற்கு அடுத்த முழு சந்திர கிரகணம் ஜனவரி 31, 2037-இலும் நிகழ உள்ளன.

 

 

355 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன