சனிக்கிழமை, மே 30
Shadow

ஜெ., பிறந்த நாளில் EPS-OPS ஆதரவாக உதயமாகிறது அம்மா டிவி, நமது அம்மா நாளிதழ்..!

அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, ‘நமது எம்.ஜி.ஆர்.,’ மற்றும் ஜெயா, ‘டிவி’ ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி விட்டதால், அ.தி.மு.க.,விற்கென புதிய நாளிதழ் மற்றும், ‘டிவி’ துவக்க, ஒருங்கிணைப்பாளர்,பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்,பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

நம் தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளும் தங்களுக்கெனத் தனியாக தொலைக்காட்சி வைத்துள்ளன. ஆனால் சசிகலாவிடமிருந்து ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாக பிரிந்தபிறகு அவர்களுக்கென ஒரு தனி தொலைக்காட்சி இல்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஜி டிவி என்ற பெயரில் இயங்கி வந்த சேனல் ஒன்று தொடர்ச்சியாக நடத்த முடியாமல் மூடப்பட்டது. அந்த சேனலை ஓபிஎஸ் அணி விலை பேசி வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பல கோடிகள் கைமாறியதாகவும் தெரிகிறது. அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பயன்படுத்திய சாதனங்கள், அலுவலகம் என அதை அப்படியே விலை பேசி வாங்கியுள்ள ஓபிஎஸ் அணி, விரைவில் அம்மா டிவி என்ற பெயரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் அ.தி.மு.க., தலைமை பேச்சாளரான, நடிகர் ஜெயகோவிந்தன், ‘நமது அம்மா’ என்ற பெயரில், நாளிதழ் ஒன்றை நடத்தி வருகிறார். அதை வாங்கி, கட்சி பத்திரிகையாக நடத்த முடிவு செய்துள்ளனர்.ஏற்கனவே நமது எம்.ஜி.ஆர்.நாளிதழின் ஆசிரியராக இருந்து தினகரனால் சமீபத்தில் நீக்கப்பட்ட  மருது  அழகுராஜ்  அம்மா பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இரண்டையும், ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல் துவக்க திட்டமிட்டு உள்ளனர்.

355 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன