
சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அதனை தொடர்ந்து, விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் தாயாரை தரிசனம் செய்தனர்.
அதன்பின்னர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆண்டாளை பற்றி இழிவாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும். ரஜினியும், கமலும் அரசியலில் எனக்கு ஜூனியர்கள். நான் சீனியர் என பேசினார்.
மேலும், வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி போராட்டம் நடத்தி வரும் சடகோப ராமானுஜ ஜீயருக்கு விஜயகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
362 Views
