சனிக்கிழமை, மே 30
Shadow

விருது அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை: இளையராஜா

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.
இளையராஜாவிற்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விருது பெறுவது பெற்றி இளையராஜா கூறும்போது, ‘பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
386 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன