சனிக்கிழமை, மே 30
Shadow

மோடியின் பகோடா வியாபார பேச்சுக்கு பிச்சைக்கார வருமானம் சொல்லி பா.சிதம்பரம் நக்கல்..!

முன்னாள் நிதிமந்திரி ப. சிதம்பரம் தொடர்ச்சியாக டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் மத்தியில் உள்ள மோடி அரசை கடுமையாக சாடிஉள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனியார் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியில், “ பக்கோடா விற்பனை செய்யும் நபர் வீட்டிற்கு ரூ. 200 கொண்டு சென்றால் அதனை வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா, இல்லையா?,”என பேசியிருந்தார். இதனை தாக்கும் வகையில் ஹர்திக் பட்டேல் பேசுகையில், “டீக்கடைக்காரர் இப்படிதான் பேசுவார், பக்கோடா கடை வைப்பதையும் அவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாக கருதுவார்கள். நிச்சயமாக பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமலே இருக்கிறார்,”என குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடி பக்கோடா விற்பனை செய்து ரூ. 200 சம்பாதிக்கலாம் என்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு வெளியே போராட்டமும் நடைபெற்றது.
இப்போது பக்கோடா விற்பனை தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சை மையப்படுத்தி காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும் விமர்சனம் செய்து உள்ளார்.
ப.சிதம்பரம் 5-வது எண்ணிட்டு பதிவுசெய்து உள்ள டுவிட் செய்தியில், “பக்கோடா விற்பனை செய்வதை பிரதமர் வேலைவாய்ப்பு என குறிப்பிட்டு உள்ளார். அந்தவகையில் பார்த்தால் பிச்சையெடுப்பது கூட வேலைதான். ஏழ்மை அல்லது முடியாமை காரணமாக வாழ்க்கைக்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களையும் ‘வேலை வழங்கப்பட்டவர்களாக’ என எண்ணிக்கையை தொடங்குங்கள்,”என குறிப்பிட்டு உள்ளார். தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு அடுத்ததாக பதிவிட்டு உள்ள செய்தியில்,
“வேலைவாய்ப்பு தொடர்பான விவாதத்தில், ‘வேலைவாய்ப்பு’ மற்றும் ‘சுய வேலைவாய்ப்புக்கு’ இடையே இடைவேளியை கொண்டிருக்க வேண்டியது முக்கியமானது. வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது வழக்கமானது மற்றும் நியாயமான பாதுகாப்பானது. இதுபோன்று எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்,” என குறிப்பிட்டு உள்ளார்.
535 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன