சனிக்கிழமை, மே 30
Shadow

தொழில் அதிபர் மீது நடிகை ஜீனத் அமன் பாலியல் புகார்

மும்பை ஜூகு பகுதியில் வசித்து வருபவர் நடிகை ஜீனத் அமன். 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் பல படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இவர் தனது நடிப்பு திறமைக்காக 3 முறை பிலிம்பேர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்தி சினிமாவில் நுழைவதற்கு முன் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்தவர். மேலும் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தையும் வென்றெடுத்தவர்.
தற்போது 66 வயதாகும் ஜீனத் அமன் மும்பை ஜூகு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், தனது குடும்ப நண்பரும், தொழில் அதிபருமான அமர்கன்னா என்பவர் தன்னை மானபங்கம் செய்ததாக கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நடிகை ஜீனத் அமனும், தொழில் அதிபர் அமர் கன்னாவும் குடும்ப நண்பர்கள். இந்த நிலையில் திடீரென பிரச்சினை ஏற்பட்டு 2 குடும்பத்தினரும் பேசுவதை நிறுத்தி உள்ளனர். அதன் பிறகும் தொழில் அதிபர், நடிகைக்கு குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
மேலும் ஒருநாள் அமர் கன்னா, ஜீனத் அமன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று காவலாளியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இது குறித்து நடிகை ஜீனத் அமன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகையின் பாலியல் புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
418 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன