சனிக்கிழமை, மே 30
Shadow

ஊழல் புகாரால் மண்ணைக் கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

விஷாலுக்கு ரித்திஷ் பகிரங்க சவால்..!

நடிகர் வாராகி நடித்து இயக்கி தயாரித்திருக்கிற படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், தருண், இயக்குனர் எஸ்.ஏ.சி. உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஹய்லைட் ஆக நடிகர் சங்கத்தின் மலேசியா நிகழ்ச்சி நடத்தி தருவதற்கு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு லஞ்சமாக பலகோடிகள் பேரம்பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழாவில் ஜே.கே.ரித்திஷ் பேசியதாவது:
நான் என் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த வீடியோவை எனக்கு தெரியாமலேயே எடுத்திருக்கிறார். அந்த வீடியோவைதான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
விஷாலை இதுவரைக்கும் என் நண்பன் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். விஷால் ஊழல் பண்ணார்னு வாராகி அண்ணே கேஸ்போட்டப்ப கூட நான் சொல்லுவேன் அண்ணே யாரையும் அப்படி சொல்லாதீங்க. நிர்வாக திறமையின்மைன்னு சொல்லுங்க அல்லது நிர்வாகத்துல தவறு நடந்திருக்குன்னு சொல்லுங்க. ஒரு நடிகனுக்கு இமேஜ் ரொம்ப முக்கியம். ஆதாரம் இல்லாம யார் மேலயும் ஊழல் குற்றச்சாட்டு சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்.


அப்பல்லாம் அவர்(வாராகி) சொல்லுவார் அண்ணே உங்களுக்கு தெரியாதுன்னே ஒருநாள் மாட்டும்போது உங்களுக்கு ஆதாரம் காட்டுறேன்னு சொல்லுவார்…
அதுக்கு நான் சொன்னேன் அப்படி நீங்க ஆதாரம் காட்டினா அதை நானே ஊடகங்கள் முன்பு பேசுறேன் என்று சொல்லியிருந்தேன். இந்த கூட்டத்துக்கு வந்திருக்கிற எல்லாருமே எதுக்கும் பயப்படாதவங்க. நானும் யாருக்கும் பயப்படமாட்டேன். யாருக்கும் துரோகம் பண்ணதில்லை.
இங்க பேசும்போது எஸ்ஏசி அவர்கூட சொன்னார் நான் டைரக்டர் யூனியனில் அவரை எதிர்த்து போட்டியிட்டேன்னு அது கூட டைரக் யூனியனில் உதவி இயக்குனர்களையும் இயக்குனர் சங்கத்துல சேத்துக்கணும், அவங்களுக்கும் ஓட்டுரிமை வேணும்னுதான் நான் போராடினேன். மத்தபடி நான் டைரக்டர் யூனியன் மெம்பர் கூட இல்லை.
விஷால் தேர்தலில் ஜெயிக்கணும்னு இங்க வந்திருக்கிற எல்லார் வீடுவீடாக நான் போய் ஓட்டு கேட்டேன். எதுக்காக கேட்டேன். ஒரு புது ரத்தம் வந்தா சங்கத்துக்கு நல்லது நடக்கும். உங்களுக்கு நல்லது நடக்கும்னு போய் ஓட்டு கேட்டு ஜெயிக்க வைச்சேன்.
இங்க இருக்கும் பலருக்கு வாரத்துல 2 நாள்கூட ஷூட்டிங் இருக்குறதில்லை. ஹீரோக்கள் ஜெயிச்சா கண்டிப்பா அவங்க பண்ற படங்களில் உங்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும். ஷூட்டிங் இல்லாம போனாலும் உங்களுக்கு இன்சூரன்ஸ், மெடிக்கல் எல்லா வசதியையும் நான் பண்ண வைப்பேன்னு அதனால பயப்படாதீங்க இந்த அணிக்கு வாக்கு போடுங்கன்னு என் நண்பனை உயர்வா சொல்லி ஓட்டு கேட்டேன்.
என்ன பொறுத்தவரை என்னால முடிஞ்சா உதவி பண்ணுவேன் இல்லனா யாராவது உதவி பண்ணா அவங்களோட நான் கூட நிப்பேன்.
நாடக நடிகர்களுக்கு நல்லது நடக்கட்டுமேன்னு சொல்லிதான் நான் கூட நின்னேன். ராதாரவி அண்ணன் உதவி செய்யாம போனா கூட கெடுதல் செய்ய மாட்டார். நான் உண்மையதான் சொல்றேன்.
விஷால், கார்த்தி, நாசர் இவங்க எல்லாரும் சேர்ந்து அப்ப நடிகர் சங்கத்துக்கு எதிரா எத்தனையோ போராட்டங்கள் நடத்தினாங்க ஆனா அவங்க மேல நடிகர் சங்கம் ஒரு நடவடிக்கை கூட எடுக்கல… அதாவது சங்கத்தை விட்டு நீக்குற நடவடிக்கை எதுவும் எடுக்கல. யார் வயித்துலயும் அடிக்கல. அவங்க வார்த்தையில தவறா பேசுவாங்க ஆனாலும் நடவடிக்கைன்னு யார் வயித்துலயும் அடிக்கல.


அவர்(ராதாரவி) நினைச்சியிருந்தா தேர்தல் நேரத்துல நீக்கியிருக்கலாம். ஆனால் இந்த விஷால் பதவிக்கு வந்ததில் இருந்து நான் உட்பட இதுவரைக்கும் 360பேரை சங்கத்துலயிருந்து நீக்கியிருக்கார். இந்த 360 பேர் யாரு விஷால்கிட்ட கேள்வி கேட்டவங்க. கடைசியா எனக்கு ஒரு சஸ்பெண்ட் நோட்டீஸ் அனுப்பினாங்க.
ஆனா பாருங்க அவனை பதவிக்கு கொண்டு வந்ததுக்கு எனக்கு அவன் குடுத்த பரிசு அது. நான் அதைப்பத்தி எல்லாம் கவலைப்படல. ஏன்னா எனக்கு நடிப்பு மட்டும் தொழில் கிடையாது. நான் ஒரு ஆக்சிடெண்ட்ல இங்க வந்தேன். இங்க இருக்குறவங்க நிறையபேர் ரொம்ப கஷ்டப்படுறாங்க. முடிஞ்சா உதவி பண்ணுவோமேன்னு தான் செய்தேன்.
சன் டிவி சினிமாவுக்குள்ள வரும்போதே நான் எதிர்த்தேன். சன் டிவிய உள்ள விட்டீங்கன்னா சினிமாவை அழிச்சிடுவாங்கன்னு சொன்னேன். அப்ப நான் திமுகவுல இருந்தேன். என்னை பொறுத்தவரை தப்பு நடந்தா யாரா இருந்தாலும் கேப்பேன்.
ராதாரவி, சரத்குமார் மேல எல்லாம் ஆக்ஷன் எடுக்க வேணாம் அப்படி ஆக்ஷன் எடுக்குறதா இருந்தா கோர்ட் மூலமா எடுங்கன்னு விஷால்கிட்ட பலமுறை சொல்லியிருக்கேன்.
அது உங்களோட இமேஜைதான் பாதிக்கும். யார் மேலயும் உடனே உடனே சங்கத்துலயிருந்து நீக்குற நடவடிக்கை எடுக்காதீங்கன்னு பலமுறை சொல்லியும் கேக்காதவர்தான் விஷால்.
இன்னிக்கு நீங்கயிருக்கீங்கன்னு அவங்களை நீக்கிட்டா நாளைக்கு இன்னொருத்தர் வந்து உங்களை நீக்கிட்டா சங்கத்துல ஆளே இருக்காதுன்னு எதுவாயிருந்தாலும் கூப்பிட்டு பேசுங்க. இருக்குறதே 3 ஆயிரம்பேர்தான் சொன்னேன் அதனாலதான் என்னை நீக்கிட்டாங்க போல.
விடியோவுல என் நண்பர்கள்கிட்டதான் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் போய் விஷாலுக்காக பேரம்பேசியிருக்காங்க. இந்த ரமணாவும், நந்தாவும்தான் கடந்தமுறை சன்டிவிக்கு நடிகர் சங்க நிகழ்ச்சியை வித்து குடுத்தவங்க. அதுலதான் ஊழல் நடந்ததா வாராகி கேஸ்போட்டிருக்கார்.
அதே ரமணாவும், நந்தாவும்தான் இப்ப மலேசியாவில் நடந்த விழாவுக்கு முன்னாடி போய் என் நண்பர்கள்கிட்டபோய் பேரம் பேசியிருக்காங்க. நான் விஷால் நிர்வாகத்தை பத்தி பேசியிருக்கேனே தவிர ஊழல் பத்தி பேசினதே இல்லை. ஆதாரம் இல்லாம பேச மாட்டேன். அப்படியே யார் பேசினாலும் ஆதாரத்தோடு பேசுங்கன்னு சொல்லுவேன்.
அப்படிப்பட்ட விஷாலுக்கு எத்தனை கோடி குடுப்பீங்க விழாவை நீங்க சொல்றமாதிரியே நடத்திக்கலாம்னு ரமணாவும், நந்தாவும் மலேசியாபோய் என் நண்பர் அன்வர்கிட்ட பேசியிருக்காங்க.
அந்த நண்பரை ரமணாவுக்கு நான்தான் அறிமுகப்படுத்தி வைச்சேன். அந்த ரமணாதான் விஷாலுக்காக போய் டத்தோகிட்ட பேரம் பேசியிருக்காரு.
சமீபத்துல டத்தோ வந்திருந்தப்போ நான் பேசிகிட்டிருந்தேன். அப்ப யதார்த்தமா அவர் கேட்டாரு ஏன்னே மலேசியா நிகழ்ச்சிக்கு வரலைன்னு கேட்டார். அதுக்கு நான் ‘அதான் பிச்சை எடுக்க வந்த நடிகர்கள்’னு செய்தி போடுறீங்களே எப்படி வர்றது அதோட அவங்க நடவடிக்கை எனக்கு சரியா படலை அதனால வரலைன்னு சொல்லிகிட்டிருந்தேன்.
அப்ப டத்தோ என்னிடம் சொன்னது ‘நீங்க அறிமுகப்படுத்திய ரமணா என் கிட்ட விஷாலுக்கு இத்தனை கோடி குடுத்திடுங்கன்னு பேரம் பேசினார் என்று சொன்னார்.
அவர் பேசியபோது யார் வீடியோ எடுத்ததுன்னே தெரியல. அதுதான் இப்ப நீங்க பாத்தது.
அப்பவே நான் சொன்னேன் விஷால் மேல வாராகி ஊழல் குற்றச்சாட்டு சொல்லி கேஸ்போட்டது சரிதான்னு மீடியாக்கள் புரிஞ்சிக்கணும். எந்த விஷால் நல்லவன்னு நான் சொனேனோ அந்த விஷால்தான் இவ்ளோ மோசமானவனா இருக்கான்.
இப்ப இந்த மேடையில விஷாலுக்கு நான் சேலஞ் கட்றேன். விஷால் இன்னியலந்து நீ எண்ணிக்க இந்த நடிகர் சங்கத்துல வர்ற தேர்தல்ல நீ நில்லு… நான் அடுத்த வாரம் மறுபடியும் மெம்பர் ஆகிடுவேன். எனக்கு கோர்ட் இருக்கு. அதுல டைரக்ஷன் வாங்கி உள்ள வந்துடுவேன் அது எனக்கு ஒரு விஷயமே இல்ல. இனி நடிகர் சங்கத்துல நீ எப்படி பதவிக்கு வரப்போறேன்னு பாத்துடுவோம்.
தயாரிப்பாளர் சங்கத்து தேர்தல்ல நான் முழுசா வேலை பாக்கல. காரணம் அப்ப எங்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் இருந்தது அதனால முழுசா வேலை பாக்கமுடியாம போயிடுச்சி. இந்த தேர்தல்ல விஷால் உன்னை எதிர்த்து யார் நின்னாலும் அவங்களோட நான் நிப்பேன். நீ எப்படி ஓட்டு வாங்கிடுவ… உன் கூட இருக்குற ஒரு 100 நடிகரைத் தவிர வேறு யாரும் ஏன் ஒரு நாடக நடிகர்கள் கூட ஓட்டு போட தயாரா இல்லை. நீ அதை செய்றேன் இதை செய்றேன்னு சொன்னாலும் அதை ஏத்துக்க இங்கயாரும் தயாரா இல்லை. இங்கயிருக்கும் செங்கலை வைச்சி கட்டடம் கட்டினா மட்டும் உனக்கு புண்ணியம் வந்துடும்னு நினைக்காத. சங்கத்துல இருக்கும் மெம்பர்களை மதிக்கத் தெரியாதவன் நீ. நான் கூட இருக்கும்போது ஒருமுறை சிவக்குமார் சாரை போய் நான் விஷால், கார்த்தி எல்லாரும் போய் பாத்தப்போ ‘டேய் எப்படியாவது ஜெயிச்சிடுங்கடா இல்லனா நாம தனிச் சங்கம்தான் ஆரம்பிக்கணும்னு சொன்னார்’ அவர் சொன்னா மாதிரி நீ வேணா தனிச் சங்கம் ஆரம்பிச்சிட்டு போ. இனி இந்த தென்னிந்திய நடிகர் சங்கத்துல வர்ற ஆகஸ்ட்ல நாங்க போய் உக்காரப்போறோம். இனி இந்த சங்கத்துக்குள்ள நீ நுழையவே முடியாது இதை நான் சேலஞ்சா சொல்றேன்.

எஸ்வி.சேகர் பேசும்போது ‘நாம் ஒருத்தரை நல்லவர்னு நம்பிதான் கொண்டுவர்றோம். அவங்க ஜெயிச்சதும் பதவி அவங்களுக்கு கிடைச்சதும் அதிகாரம் தலைக்கு ஏறினதும் அப்படியே மாறிப்போயிடுறாங்க. இப்பவும் நான் சொல்றேன். ஜே.கே.ரித்திஷ் எங்கயிருக்காரோ அவர் யாரை கை காட்டுறாரோ அவர்தான் ஜெயிக்க முடியும் மத்தவங்களுக்கு கஷ்டம்தான்’ என்றார்.

விழா முடிவில் நலிந்த 100 நாடக நடிகர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் சுமார் 10 லட்சரூபாயை நலநிதியாக நடிகர் ரித்திஷ் வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இதுவரை இதுபோன்ற நலதிட்ட நிதி வழங்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் ஏதாவது சங்கங்களின் விழாக்களில் அல்லது சங்கத்தின் சார்பில்தான் நடத்தப்படும் அதிலும் சில ஆயிரங்கள் மட்டுமே நிதியாக அறிவிக்கப்படும்.
முதல்முறையாக திரைத்துறை வரலாற்றில் ஒரு சினிமாவின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒரு நடிகர் தனது சொந்தப்பணத்தில் இருந்து 10 லட்ச ரூபாயை நலிவடைந்த நாடக நடிகர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் வழங்கியது இதுதான் முதல்முறை. அந்த வகையில் அள்ளித்தரும் கொடை வள்ளல் என்று சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு அவரது இயக்கத்தில் இருக்கிற ரித்திஷ் அந்த பேரை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.
அதோடு, புதுக்கோட்டையில் சொந்த வீடு இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள நாடக நடிகர்கள் சுமார் 50 பேர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் தவணைமுறை வீடு திட்டத்தில் வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும் ஜே.கே.ரித்திஷ் பெற்றுத் தந்திருக்கிறார். அதோடு, அதற்கு கட்டவேண்டிய முன்பணத்தையும் தனது சொந்த பணத்தில் இருந்து தலா 70 ஆயிரம் வீதம் சுமார் 40 லட்சரூபாயை அரசுக்கு கட்டி அந்த வீடுகளை பெற்றுத் தந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நலிவடைந்த நாடக நடிகர்கள் மீது எம்ஜிஆருக்கு பிறகு அதிக அக்கறையோடு கரிசனையோடு செயல்படுகிறவர் யார் என்றால் அது ரித்திஷ் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
கடந்தமுறை விஷால் நடிகர் சங்கத்தேர்தலில் ஜெயிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது இந்த நாடக நடிகர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை ஒன்று திரட்டி அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஓட்டு போட வைத்து விஷாலை ஜெயிக்க வைத்ததும் ஜேகே.ரித்திஷ்தான்.
அப்படி வெற்றிக்கு பெரிதும் பாடுபட்ட ரித்திஷ் தவறுகளை தட்டிக்கேட்டார், நிர்வாக குறைகளை சுட்டிக்காட்டினார் என்பதற்காக விஷாலின் நடிகர் சங்கத்தில் இருந்தே தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.
இவரைப்போலவே கடந்த தேர்தலில் விஷாலின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எஸ்.வி.சேகரும் இப்போது விஷாலுக்கு எதிராக திரும்பியிருக்கிறார்.
நடிகர்கள் சரத்குமார், ராதாரவியின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி பதவியை பிடித்தவர்கள் மீது இப்போது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்தோடு எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த மலேசியா மெகா ஊழல் சிக்கலில் இருந்து விஷால் அணி தப்பிக்குமா தலைகுப்புற கவிழுமா என்பது வரும் ஆகஸ்ட் தேர்தலுக்கு முன்பே தெரிந்து விடும். காரணம், மொத்தமுள்ள 3 ஆயிரம் உறுப்பினர்களை ஒருசில நூறு நடிகர்களை தவிர மற்ற அனைவருமே விஷால் அணியினர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
போதாதற்கு அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களோடு வெளியாகி வருவதால் ஆகஸ்ட் தேர்தல் விஷால் அணிக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்திதான்..!

கோடங்கி

738 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன