சனிக்கிழமை, மே 30
Shadow

2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்

இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்.வீட்டில் பெற்றோர்கள் திட்டிய காரணத்தினாலயே தாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாய் பெரும்பாலான குழந்தைகள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
”706 குழந்தைகளில்,பெரும்பாலான குழந்தைகள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் மும்பை நகரின் பல்வேறு ரயில்வே பிளாட்பாரங்களிலும்,புறநகர் பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் 13 முதல் 18 வயது உடையவர்கள்.மேலும் அவர்கள் உத்திரப்பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.இதில் மும்பை மத்திய ரயில் நிலையம் பகுதிகளில் மட்டும் அதிகபட்சமாக 129 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்”என தெரிவித்தனர்.
மற்றொரு ரயில்வே அதிகாரி கூறுகையில்,இங்கு வருகிற இளம்பருவத்தினர் நகர வாழ்க்கையின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு நடிகராகவும்,பாடகராகவும் ஆக வருகின்றனர்.சிலர் தமக்கு பிடித்த நட்சத்திரங்களை காணவும்,சிலர் கிரிக்கெட் வீரர் ஆக விருப்பப்பட்டு வருகின்றனர் என கூறினார்.
ரயில்வே அறிக்கையின் படி,மீட்கப்பட்ட 706 குழந்தைகளில் 425 பேர் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும்,265 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் தகவல் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும்,மீதி 16 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
337 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன