வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய லுக்அவுட் நோட்டீஸ் ரத்தாகுமா வரும் 16ல் தீர்ப்பு..!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து தன்மீதான லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும், தான் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கில் தொடர்பாக இன்று நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் பிப்ரவரி 16 ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.

 

335 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன