கல்யாணத்தில் முடிந்த காதல்
கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம்
ரிஸி பிலிம்ஸ் பங்குதாரரான கார்த்திக் – நடிகை சாட்னா டைட்டஸ் திருமணம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி காலை சேலத்தில் இரு வீட்டாரது உறவினர்களும் நண்பர்களும் சூழ இனிதே நடைபெற்றது. நடிகை சாட்னா டைட்டஸ் நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தை ரிஸி பிலிம்ஸ் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ம் நாள் சென்னையில் விமர்சையாக நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்ட முதல் நட்சத்திர ஜோடி என்ற பெயரை கார்த்திக், சாட்னா ஜோடி பெற்றிருக்கிறது.

423 Views
