
ராமேஸ்வரத்தில் நேற்று அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரையும், ஆறு கைகள் இணைந்த சின்னத்தை கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இடது பக்கமா? வலது பக்கமா? என கேட்காதீர்கள். நடுவில் பயணிக்க விரும்புகிறேன் என தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நடக்கும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, நிர்வாகிகளை தேர்வு செய்வது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
341 Views
