
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் உலகிலேயே முதன்முதலாக முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்களை கொண்ட முதல் விமானத்தை கொல்கத்தா – சில்ச்சார் இடையே கடந்த 1985-ம் ஆண்டு இயக்கி சாதனை படைத்தது.
இதன் அடுத்தகட்டமாக, டெல்லி-சான் பிரான்சிஸ்கோ-டெல்லி வழித்தடத்தில் கடந்த ஆண்டு முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்களை கொண்ட விமானத்தை இயக்கியதன் மூலம் ஏர் இந்தியா உலக சாதனை படைத்தது.
இந்நிலையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்கள் இயக்கிய ஏர் இந்தியா விமானம் இன்று கொல்கத்தாவில் இருந்து திம்மாப்பூர் நகருக்கு புறப்பட்டு சென்றது.
வழித்தடம் AI709-ஐ கொண்ட ஏர்பஸ் 319 ரக விமானத்தின் விமானிகளாக கேப்டன் அகான்க்ஷா வெர்மா, கேப்டன் சட்டோவிசா பானர்ஜி ஆகியோர் ஓட்டிச் சென்றனர்.
கொல்கத்தா நகரில் இருந்து இன்று காலை 11:25 மணியளவில் ஏர் இந்தியாவின் பொது மேலாளர் நவ்நீத் சித்து இந்த விமானத்தை கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார். பகல் 1.10 மணிக்கு திம்மாப்பூர் சென்றடைந்த இந்த விமானம் மீண்டும் கொல்கத்தாவுக்கு திரும்பி வந்தது.
280 Views
