சனிக்கிழமை, மே 30
Shadow

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மா? – மத்திய அரசு மறுப்பு

பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி  திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்பதால், அதில் மர்மம் இருப்பதாகப் பரபரப்பாக பேசப்பட்டது. அதனால், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
ஸ்ரீதேவியின் உடல், துபாய் நகரில் உள்ள மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் குளியலறையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்ததாக துபாய் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் பிறகு, அவரது உடல், இந்தியாவுக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தனி விமானம் மூலம் வரப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திலும் பொதுமக்களின்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஐக்கிய அரபு அமீரகம் எங்களிடம் கொடுத்து விட்டது. அந்த ஆவணங்களின் அடிப்படையில், அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியேதும் இருந்திருந்தால், இப்போது வெளியே அம்பலமாகியிருக்கும்” என்றார்.
548 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன