சனிக்கிழமை, மே 30
Shadow

இலங்கைக் கலவரம் குறித்து விசாரணை நடத்த கமிஷன் : சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் கண்டி மாகாணத்தின் மத்திய பகுதி ஒன்றில், பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கும் இடையே எற்பட்ட மோதலை அடுத்து, மார்ச் மாதம் 6-ஆம் தேதி, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனை அங்குள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவும், கலவரத்தை சரியான முறையில் கையாள தவறிவிட்டனர் என்று எதிர்கட்சிகள் கடுமையாக தாக்கி உள்ளன.

அதே சமயம் இலங்கைகண்டியில் முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், மசூதிகள் தாக்குதல்களுக்கு இரையாகின. கடந்த திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கமிஷன் ஒன்றை இலங்கை அதிபர் சிறிசேனா அமைத்துள்ளார்.

அந்த விசாரணை கமிஷனில் 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். அந்த விசாரணை கமிஷன் கண்டி மாவட்டத்தில் வன்முறை வெடித்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து தனது அறிக்கையில் குறிப்பிடும். வன்முறை ளினால் ஏற்பட்ட இழப்பீடுகள்-உயிரிழப்பு, உடமை இழப்பு குறித்து மதிப்பீடுகள் கமிஷன் மேற்கொள்ளும்.

கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற இந்த வன்முறைகளுக்கு பின்னால் சதி திட்டம் எதுவும் உள்ளதா என்று ஆய்வு செய்யும் பணியையும் விசாரணை கமிஷன் நிறைவேற்றும். இத்தகைய வன்முறை சம்பவங்கள் இடம் பெறாமல் தடுக்க என்ன செய்ய வேண்டுமென்று பரிந்துரைகளையும் விசாரணை கமிஷன் வெளியிடும். வன்முறை சம்பவங்கள் வெடித்த சமயத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றினார்களா என்றும் இந்த கமிஷன் உறுப்பினர்கள் ஆய்வு செய்து தங்கள் அறிக்கையில் குறிப்பிடுவார்கள்.

கமிஷனில் இடம் பெறும் 3 ஓய்வு பெற்ற நீதிபதிகளின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட வன்முறைகள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் 146 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

372 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன