வரும் 19ஆம் தேதி ஆரம்பித்து 22ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று கூறியுள்ள சபாநாயகர் தனபால், அன்றைய தினங்களில் பட்ஜெட் மீது பொதுவிவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக துணை முதல்வரும் , நிதி அமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்…
மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு.
காவல்துறை நலன் மற்றும் மேம்பாட்டிற்க்கு ரூ 7,877.58 கோடி நிதி ஒதுக்கீடு.
வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு
விவசாயிகளுக்களாக “உழவன்” என்ற அலைபேசி செயலி.
வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்து , மாதாந்திர உதவித் தொகை பெற்று வரும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து உரிய வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்பட்டு, ஆண்டு மானியமாக ரூ.2 கோடி வழங்கப்படும்.
வேளாண் துறைக்கு ரூ.8,916.25 கோடி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.71 கோடி ஒதுக்கீடு.
காவல்துறைக்காக 35 புதிய கட்டடங்கள், 15 காவல் நிலையங்கள், 543 குடியிருப்புகள் கட்டப்படும்.
2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்.
குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித்துறைமுகம், மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும்.
3 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்க இலக்கு

மெட்ரோ ரயிலின் 107.55 கி.மீ. நீள வழித்தடம் அமைக்க மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
கிண்டியில் ரூ.20 கோடி செலவில் “அம்மா பசுமைப்பூங்கா” அமைக்கப்படும்.
பசுமை வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடி செலவில், 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.482.84 கோடி ஒதுக்கீடு.
நபார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு
ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப்படும்.
மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி ஒதுக்கீடு
இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு.
குழந்தைக்களுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி ஒதுக்கீடு.
மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும்.
உயர் கல்வித்துறைக்கு ரூ.4,620 கோடி நிதி ஒதுக்கீடு
கோவையில் டைசல் உயிர்ப் பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
வரும் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 8000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்
செங்கோட்டை- கொல்லம் இடையில் 45 கி.மீ. சாலையை அகலப்படுத்தும் பணி துவக்கம்
ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி இடையே சாலையை 4 வழி சாலையாக்க திட்டம்.
சென்னையில் வெள்ள தடுப்பு மேலாண்மை திட்டத்திற்கு 2055.67 கோடி ஒதுக்கீடு.
ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும்.
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது
இலங்கைத் தமிழ் அகதிகளின் நலத் திட்டங்களுக்கு ரூ.109. 42 கோடி ஒதுக்கீடு
2019 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டு மானியம் 2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்படி தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாசித்து முடித்த பிறகு, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் 3.30மணியளவில் தொடங்கும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் தனபால் தலைமையில் அவரது அறையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 19ஆம் தேதியிலிருந்து நான்கு நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான பொதுவிவாதம் 19, 20, 21ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், 22ஆம் தேதி மானியங்கள் பதிலுரைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய சபாநாயகர் தனபால், ” நாளை 16ஆம் தேதி அவை கிடையாது. 17, 18ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை, 19ஆம் தேதி மீண்டும் தொடங்கும் கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கும். 20, 21ஆகிய தேதிகளிலும் பொதுவிவாதம் நடைபெறும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “22ஆம் தேதி கேள்வி நேரம் இல்லை. அன்றைய தினம் பேரவை முன் பண மானியக் கோரிக்கை, இறுதி துணைநிலை அறிக்கை அளித்தல். அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் அன்றைய தினத்தில் மானியக் கோரிக்கை நிதி ஒதுக்க சட்டமுன் வடிவும் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்பண மானியக் கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற சபாநாயகர் , இறுதியாக அரசின் சட்டமுன் வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
