சனிக்கிழமை, மே 30
Shadow

அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம்?

அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக-வின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலாவும் அவரும் சேர்ந்து தன்னை தாக்கியதால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க இவர் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்கியதும் அடுத்த பரபரப்பாக சசிகலா புஷ்பாவும், திமுக எம்.பி., திருச்சி சிவாவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்ததாக அவர் வீட்டு பணிப்பெண்கள் சசிகலா புஷ்பாவால் தாங்கள் துன்புறுத்தப்படுகிறோம் என்று தூத்துக்குடி காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா புஷ்பா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட போகிறார் எனவே அவர் சார்பாக மனுத்தாக்கல் செய்ய வந்திருக்கிறேன் என அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் அங்கிருந்தவர்களால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். இப்படி சசிகலா புஷ்பாவை சுற்றி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் சசிகலா புஷ்பாவிற்கும், ராமசாமி என்பவருக்கும் வரும் மார்ச் 26-ம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதுதொடர்பாக சசிகலா புஷ்பா பெயர் மற்றும் ராமசாமி பெயருடன் திருமண அழைப்பிதழ் மற்றும் ராமசாமியுடன் அவர் இணைந்திருப்பது போன்ற புகைப்படமும் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவம் சசிகலா புஷ்பாவை சுற்றி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
354 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன