கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோலில் வெளியே வந்திருக்கும் சசிகலாவிற்கு திடீரென் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த சசிகலாவின் கணவர் ம.நடராஜன் மார்ச் 20-ந் தேதி காலமானார். அவரின் உடல் பெசண்ட்நகரில் உள்ள அவரின் வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது.
இந்நிலையில் தஞ்சையில் தங்கியிருக்கும் சசிகலாவிற்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சசிகலா நலமுடன் உள்ளார். அவரது உடல் சோர்வாக காணப்படுகிறது என்றனர். ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்றனர். இதனால் சசிகலாவை யாரும் சந்திக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அங்கிருந்த நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
எக்ஸ்ட்ரா நியூஸ்:
சசிகலா குடும்பத்தில் நடராஜன் மறைவுக்கு பின் சர்ச்சைகள் வெடிக்கின்றன என்கின்றன செய்திகள். அதாவது மன்னார்குடி குடும்பம் என சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, என இரு டஜன் நபர்களை தமிழகம் அறியும், சொத்து குவித்து சுருட்டினார்கள் என கைக்காட்டபடுவது இவர்கள்தான்.. ஆனால் இவர்களின் சூத்ரதாரியாக இருந்த நடராஜனின் குடும்பமும் பெரிது, அவர் பெயரிலும் ஏகபட்ட சொத்துக்கள் வாங்கிபோடபட்டதாம். தற்போது நடராஜன் சொத்துகளும் அவரின் பினாமியான உடன்பிறந்தவர்களின் சொத்துக்களும் சசிகலாவிற்கு வரவேண்டும் என்பது மன்னார்குடி லாபி.. ஆனால் இதோ பாருங்கள் சசிகலா தம்பதியருக்கு குழந்தையில்லை, அதனால் நடராஜன் வழி சொத்து எங்களுக்கு, சசிகலா வழி சொத்து உங்களுக்கு என பங்கு பிரித்தது நடராஜன் குடும்பம்.. ஆனால் இப்பொழுதும் சிறையில் இருப்பவர், அவர் செய்த தியாகம் அப்படி, அதனால் அவருக்கே முழு சொத்தும் என மன்னார்குடி மல்லு கட்டுகின்றது.. தற்போது சசிகலா தரப்பிற்கு பெரும் ஆதாரம் இல்லா நிலையில் பினாமி சொத்தை மீட்க முடியாமல் பரோலை ரத்து செய்யும் முடிவில் இருந்த சசிகலா உடல் நிலை மோசமானதற்கு காரணம் இதுதானாம்
