ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

தேசியகொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

 தேசியகொடி அல்லது இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது இடத்தில் தேசிய கொடியை அவமதிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொது இடத்தில் தேசியகொடி அல்லது இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கொடியை அல்லது இந்திய அரசியலைப்புச் சட்டத்துடன் தொடர்புடைய பகுதியை எரிக்கிற, சிதைக்கிற, அழிக்கிற, மிதிக்கிற அல்லது அவமதிக்கிற செயலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது காகிதத்தால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் காகித தேசிய கொடியை தூக்கி எறியக்கூடாது எனவும் உரிய கண்ணியத்துடன் கையாளப்பட வேண்டும் என்றும் ஆட்சியர் அன்புசெல்வன் கூறியுள்ளார்.
494 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன