ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

தமிழ் திரையில் 40 ஆண்டு வாழ்க்கையை நிறைவு செய்த ‘விஜயகாந்த்’-க்கு விழா!

தமிழ் திரையின் மூத்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரு மான விஜயகாந்த் தனது 40 ஆண்டு கால சினிமா பயணத்தை நிறைவு செய்கிறார்.  அதனைக்  கொண்டாடும் விதமாக சென்னையை அடுத்த கரசங்கள் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் பல அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் ,’எனது அன்பான சகோதரர் விஜயகாந்த் அவர்களை வெறுக்கிறவர்கள் கூட ஒரு கட்டத்தில்  நேசிப்பார்கள்’.  இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களாலும், தொண்டர்களாலும் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் ஆரம்ப காலகட்டங்களில், கருப்பு நிற தோற்றம் காரணமாக பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களால் தவிர்க்கப்பட்டவர். ஆனால் அழகு என்பது தோற்றத்திலும், முகத்தில் இல்லை என்பதை உணர்ந்து தனது விடா முயற்சியால் படிப்படியாக முன்னேறி 1980-1990 காலகட்டங்களில் கோலிவுட்டில் தனித்துவமாய் கொடி கட்டிப் பறந்தவர் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

இவர் நடிப்பில் வெளிவந்த, அவரது 100-வது படமான கேப்டன் பிரபாகரன் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கண்டது. மேலும், அவரது திரைப்படங்களான புலன் விசாரணை, சின்ன கவுண்டர், வானத்தைப் போல, ரமணா போன்ற பல வெற்றிப் படங்களை தந்து தனது, அன்பால் எண்ணி லடங்கா ரசிகர் பட்டாளத்தையும், மக்கள் செல்வாக்கையும் உருவாக்கி கேப்டன், கருப்பு எம்ஜிஆர், புரட்சிக் கலைஞர் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறார்.

தொடர்ந்து, 2005-ஆம் ஆண்டுகளில் முதன் முறையாக கட்சியை  ஆரம்பித்து, 2006 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு  எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.

துரதிஷ்டவசமாக, கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் உட்பட அவரது கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, தேமுதிக கட்சியிலிருந்த பலர் வெளியேற, இனி விஜயகாந்த் காணாமல் போவார் என பலரும் விமர்சனம் செய்தனர்.  ஆனால், அதையெல்லாம் கடந்து, அரசியலில் மீண்டும் காலூன்றுவார் என அவரது ரசிகர்களும், தொண்டர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அதிரடியாய் வலம் வந்த  ‘கேப்டன் பழையமாதிரி பன்னீர் செல்வமா நீங்க வலம் வரணும்’ என்பது அவரது தொண்டர்களின் ஏகோபித்த குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

765 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன