
முன்பெல்லாம் பாலைவன நாடுகளில்தான் புழுதி புயல் குறித்து கேள்வி பட்டிருப்போம். அல்லது ஹாலிவுட் படங்களில் இப்படி காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் பருவ நிலை மாற்றங்களால் இப்போது நமது நாட்டிலும் இதுபோன்ற இயற்கை சீற்றங்களை பார்க்கும் அதிர்ச்சிகள் நடை பெறுகிறது.
சமீபத்தில் வட மாநிலங்களில் கடுமையான புழுதி புயல் தன் கோர முகத்தை காட்டியது. தெலுங்கானா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இதைப்போல இடியுடன் கூடிய பெருமழை பெய்தது.
இந்த 5 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை மற்றும் புழுதி புயலில் சிக்கியும், மின்னல் தாக்கியும் கடந்த 2 நாட்களில் 124 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 73 பேரும், ராஜஸ்தானில் 35 பேரும் பலியாகி இருப்பதாக உளதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டம்தான் இந்த பேரிடரால் அதிக பாதிப்பை சந்தித்து உள்ளது.
இங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் தனது கர்நாடக பயணத்தை பாதியில் முடித்துவிட்டு சொந்த மாநிலம் திரும்பியுள்ளார்.
