சனிக்கிழமை, மே 30
Shadow

தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஆய்வு

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தி வந்தார்.

தி.மு.க.வில் உள்ள 65 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்தி முடிந்ததை தொடர்ந்து இப்போது அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்த மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் வருகிற 11-ந்தேதி காலை 8 மணிக்கு இளைஞர் அணியின் மாநில நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். 9 மணிக்கு தொண்டர் அணி, 10 மணிக்கு வழக்கறிஞர் அணி, 11 மணிக்கு இலக்கிய அணி, 12 மணிக்கு விவசாய அணி, பகல் 12.30 மணிக்கு விவசாய தொழிலாளர் அணியுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்.

12-ந்தேதி காலை 8 மணிக்கு மாணவர் அணி, 9 மணிக்கு மீனவர் அணி, 10 மணிக்கு நெசவாளர் அணி, 11 மணிக்கு ஆதிதிராவிடர் நலக்குழு, 12 மணிக்கு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, பகல் 12.30 மணிக்கு தகவல் தொழில்நுட்ப அணிகளுடன் ஆய்வு நடைபெறுகிறது.

13-ந்தேதி காலை 8 மணிக்கு மகளிர் அணி, மற்றும் மகளிர் பிரசார குழுவுடன் ஆய்வு நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு மகளிர் தொண்டர் அணி, 10 மணிக்கு சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, 11 மணிக்கு பொறியாளர் அணி, பகல் 12 மணிக்கு வர்த்தகர் அணி, பகல் 12.30 மணிக்கு மருத்துவர் அணியுடன் ஆய்வு நடத்துகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆய்வு நடக்கிறது.

261 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன