
மொட்ட சிவா கெட்ட சிவா
எதிர்பார்த்த அளவுக்கு இல்லை..! – விமர்சனம்
படம் முடிந்து பல ஆண்டுகள் ஓடியது… ரிலீஸ் தேதிகள் பல அறிவிக்கப்பட்டது… பேப்பர் விளம்பரங்கள் பரபரப்பாக வெளியான நிலையில் பலமுறை தடையாகி கடைசியில் நீதிமன்றத்தால் ரிலீஸ் தடை செய்யப்பட்ட லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஒருவழியாக இந்த தடை போராட்டங்களை முடித்துக் கொண்டு 9ம்தேதி ரிலீஸ் ஆகிவிட்டது.
கடமை தவறாத போலீஸ் ஆபீசர் சத்யராஜ் எப்போதும் போலீஸ் பணியிலேயே இருக்கிறார். மனைவியின் பிரசவ நேரத்தில் கூட கடமை என போய்விட்டதால் பிரசவத்தில் அம்மாவையும், குழந்தையையும் பறிகொடுக்கிறார் மகன் லாரன்ஸ். அப்போதில் இரு ந்தே அப்பா சத்யராஜ்மீது வெறுப்பு ஏற்பட்டு வீட்டை விட்டு ஓடுகிறார்.
ஒரு மந்திரியின் சிபாரிசில் ஏசிபியாக வருகிறார் லாரன்ஸ். அவருக்கு மேல் அதிகாரியாக இருக்கிறார் அப்பா சத்யராஜ். ஆனால் மகன்தான் ஏசிபி என்ற விவரம் சத்யராஜூக்கு மட்டும் தெரியாது.
வில்லனோடு கைகோர்த்துக் கொண்டு ஏசிபி லாரன்ஸ் செய்யும் அட்டகாசங்கள்… இதை கண்டிக்க முடியாமல் கமிஷனர் சத்யராஜ் திணறுகிறார். அதேநேரம், மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தை அடித்து நொறுக்கும் அடியாட்களை லாரன்ஸ் விரட்டி அடித்து நல்ல பெயர் சம்பாதிக்கிறார்.
டிவி நிருபராக வரும் நிக்கியை காதலிக்கிறார் ஏசிபி லாரன்ஸ். இதற்காக பத்திரிக்கையாளர்களை அடிக்கடி அழைத்து பிரஸ் மீட் வைக்கிறார். இந்த சூழலில், ஏசிபிதான் மகன் என்ற உண்மை சத்யராஜூக்கு தெரியவருகிறது.
இந்த சூழலில் இரவு வேலை முடித்து விட்டு வீடு திரும்பும் ஒரு இளம்பெண்ணை சிலர் காட்டுக்குள் தூக்கி சென்று கற்பழிக்க முயற்சிக்கிறார்கள். அதில் அந்த பெண் இறந்து போகிறார்.
கொலை செய்த இடத்தில் ஒரு எம்பியின் மகனுக்கு சொந்தமான கார் நம்பர் பிளேட் கிடைக்கிறது. அதை வைத்து அவனை கைது செய்ய போகிறார் கமிஷனர் சத்யராஜ். அந்த நேரம் நெம்பர் பிளேட் இல்லாத காரை ஓட்டிவரும் லாரன்ஸ் ‘காணாமல் போனதான புகார் வந்த காரை கண்டுபிடித்து கொண்டுவந்ததாக சொல்கிறார்’.
இறந்து போன பெண் யார் அவரை யார் கொலை செய்தது. அந்த கொலைகாரர்களை ஏசிபியும், கமிஷனரும் கண்டுபிடித்தார்களா… நிக்கி காதல் நிறைவேறியதா… அப்பாவும், மகனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் பின்பாதி கதை.
லாரன்ஸ் வழக்கம்போல சத்தம்போட்டு பஞ்ச் டயலாக் அடிக்கடி பேசுகிறார். ஏற்கனவே இருக்கும் பழமொழியை அடிக்கடி செ £ல்லிவிட்டு அதற்கு புதுமொழி ஒன்றும் சொல்கிறார் லாரன்ஸ். அடிக்கடி மிக பிரமாண்ட செலவில் சண்டை காட்சிகள் வேறு வருகிறது. பாடல் காட்சிகளில் கிளுகிளுப்பான ஆட்டங்கள்தான் அதிகம் காணப்படுகிறது.
சத்யராஜ் வழக்கம்போல அவருக்கு வழங்கப்பட்ட பணியை மிக சிறப்பாக செய்திருக்கிறார். நிக்கி கல்ராணி கவர்ச்சி ஹீரோயின் என்பதை மீண்டும் தனது ஆட்டங்கள் மூலம் நிரூபித்திருக்கிறார். லட்சுமிராய் குத்துப்பாட்டு ஹீரோயினாக ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டு போகிறார். கோவை சரளா, ஸ்ரீமன் என காஞ்சனா டீமும் களத்தில் இருக்கிறது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் மிக பிரபலமான பாடலான ‘ஆடலுடன் பாடலை கேட்டேன்’ பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார்கள். இயக்குனர் சாய்ரமணி என்ன சொல்ல வருகிறார்… என்பது படத்தின் கிளைமாக்ஸ்வரை யாருக்கும் புரியவில்லை. படம் முடிந்தபிறகுதான் ஆரம்ப டைட்டிலில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று லாரன்ஸ்சுக்கு பட்டம் கொடுத்தது இதற்காகத்தானோ என்று யோசிக்கும் அளவுக்கு புரியாத கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாய்ரமணி..!
மொத்தத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா… கஷ்டம்தான்..!
