புதன்கிழமை, ஜூன் 10
Shadow

ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம்  ஏற்கனவே அறிவித்தது.

இந்த மண்டபம்  கட்டுவதற்காக சுமாா் ரூ.50.80கோடியில் அளவில்  டெண்டா் விடப்பட்டன.  இதைத்தொடா்ந்து இன்று காலையில் மொினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில்  மண்டபத்திற்கான  அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது.

நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள்   காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்  பங்கேற்றனர். அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு,  மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

1,013 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன