உலக அளவிலும், இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கிரிக்கெட் விளையாட்டின் மீது மக்களுக்கு உள்ள ஆர்வமும் மோகமும் கால்பந்து போன்ற ஊக்கமிகுந்த விளையாட்டின் மீது ஏற்படுவதில்லை.
வெகு சிறப்பாக கிரிக்கெட் போல் 11 வீரர்களின் திறமையையும், வெற்றியையும் கடைசி ரன்னின் மூலம் ஆட்டத்தை முடிக்கும் ஒரு வீரர் தட்டிச்செல்வதை போல் இல்லாமல் கால்பந்து விளையாட்டை பொருத்தவரை ஆட்டத்தை தொடங்க விசில் ஊதிய நொடியில் இருந்து கோல் போஸ்டுக்குள் பந்து போய் நுழையும் வரை ஒவ்வொரு நொடியும் விளையாட்டு வீரர்களின் ரத்த நாளங்களையும், பார்வையாளர்கள் இதய துடிப்பையும் ஒருசேர கட்டிப்போட வைக்கும் கால்பந்து விளையாட்டு நம்மவர்களால் இன்னும் சரியான வகையில் கவனிக்கப்படாமலும், முக்கியத்துவம் அளித்து அங்கீகரிக்கப்படாமலும் இருப்பது வருத்தத்துக்குரிய விவகாரங்களில் ஒன்றாக உள்ளது.
இந்திய கால்பந்து அணியினர் உலக அளவில் பெயர் எடுக்கவில்லை. u-20 அணியினர் உலக கால்பந்து போட்டியில் தகுதிச்சுற்று வரை மட்டுமே சென்றுள்ளனர். இந்நிலையில், அதனை மாற்றியமைத்து இந்திய வீரர் கோகுல் பார்சிலோனா அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் – கலைச்செல்வி என்ற தம்பதியின் மகன் கோகுல் சிவகுமார். 18 வயதான கோகுல் கால்பந்தில் சிறந்த வீரராக உள்ளார். சிறுவயது முதலே கால்பந்தில் ஆர்வம் கொண்ட கோகுல் தனது விடா முயற்சியால் தமிழக ஜூனியர் கால்பந்து அணியின் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். இவரது விடாமுயற்சி இந்திய கால்பந்து அணியில் இடம்பெறச்செய்தது.

ஆனால், நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஸ்பெயின் செல்ல தேவையான தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஸ்பெயின் செல்ல மற்றும் அங்கு தங்குவதற்கு தேவைப்படும் பணத்தை நன்கொடையாக வழங்கி எனக்கு உதவுங்கள். உங்கள் ஒத்துழைப்பு கிட்டினால், இந்தியாவின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு செல்வேன் என உறுதி அளிக்கிறேன்’ என கூறினார்.
கோகுலின் பயணம் மற்றும் மற்ற செலவுகளை சேர்த்து 3 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. கோகுலின் திறமையை மதித்து அவருக்கு நிதி உதவி செய்யுங்கள். உலக கால்பந்து அணியில் கோகுலின் பெயர் இடம்பெற உதவுங்கள்.
