ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

முக்தா சீனிவாசன் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு TMJA இரங்கல்

இரங்கல் செய்தி

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் இருந்து திரைத்துறைக்கு உதவி இயக்குநராக வந்து கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர் முக்தா சீனிவாசன்.

பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

1957-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘முதலாளி’. இந்த முதல் திரைப்படமே இவருக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது.

முக்தா பிலிம்ஸ் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் அந்தமான் காதலி என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொல்லாதவன் என இவர் இயக்கி தயாரித்த படங்கள் ஏராளம். கமல்ஹாசனின் நாயகன் படமும் இவர் தயாரிப்புதான்.

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ உருவாக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த போதும் கோஷ்டி சேர்க்காதவர்.

அரசியலில் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் முன்னாள் முதல்வர்கள் காமராசர், அண்ணாதுரை, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் நல்ல நட்பு பாராட்டிய முக்தா சீனிவாசன் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு.

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவதோடு அவரது குடும்பத்தாருக்கு தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

259 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன