
தயாரிப்பாளர் சங்க இடத்தை காட்டி பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஜாக்குவார் தங்கம்
விஷால் அதிர்ச்சி
தமிழ் திரைப்படத் துறையினருக்காக முதல்வர் கருணாநிதி அவர்களால் பையனூர் பகுதியில் 95 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பெப்சி தொழிலாளர் குடியிருப்புக்கு 50 ஏக்கரும், ஸ்டுடியோ, மருத்துவ மனை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பணிகளுக்கு 15 ஏக்கரும் என பெப்சிக்கு மட்டும் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் அப்போது தலைவராக இருந்த வி.சி.குகநாதன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 ஏக்கர் நிலம் சின்னத்திரை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், 10 ஏக்கர் நடிகர் சங்கத்துக்கும் , 10 ஏக்கர் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் கில்டு அமைப்புக்கு எந்த நிலமும் ஒதுக்கப்படவில்லை.
உண்மை இப்படியிருக்க கில்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள கேட்டில் கில்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் போல பொய்யான அறிவிப்பை ஒட்டி ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில் அந்த இடம் கில்டு உறுப்பினர்களுக்கு வாங்கப்பட்ட இடம் என்றும், தான் வெற்றி பெற்றதும் இடத்தை பிரித்து உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றும் சொல்கிறார்.
தயாரிப்பாளர் சங்கத்து இடத்தை இப்படி பொய்யாக தேர்தல் வெற்றிக்கு ஜாக்குவார் தங்கம் பயன் படுத்தும் தகவல் தெரிந்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
நாளை கில்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சங்கத்தின் இப்போதைய செயலாளர் ஜாக்குவார் தங்கம் இப்படி பொய் பிரச்சார வீடியோ வெளியிட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– கோடங்கி
