
*தமிழக எல்லையில், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மங்களா தேவி கண்ணகி கோயிலில், மறு சீரமைப்பு செய்யவும், புதிய சிலை பிரதிஷ்டை செய்யவும், வருடத்தில் 27 நாட்கள் தரிசனம் செய்ய, கேரள அரசு முடிவு செய்து உள்ளது.*
*அது சம்மந்தமாக நேற்று 16.06.2018 -ம் தேதி காலை, சபரிமலையில், தமிழக பக்தர்களின் கோரிக்கையை, கடந்த 17 வருடங்களாக கையில் எடுத்த, கண்ணகி தேவி டிரஸ்ட்டின் முதன்மை தலைவர், காவல் தெய்வம் முனைவர் M. ராஜேந்திரன், IAS.,தலைமையில் சென்ற குழுவினர், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார், குழுவினர் விரைவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும் சந்தித்து, ஆதரவும், நன்றியை தெரிவிக்க உள்ளனர்.

*வரலாற்றை நேசிப்பதோடு மட்டும் அல்லாமல், சமூகம், சமுதாயம், வரலாற்றை, புத்தக வடிவில், மக்களுக்கு எளிய நடையில் தெரியப்படுத்தியும், சிதலமடைந்த கண்ணகி கோயிலை, சீரமைக்க, கடந்த 17 ஆண்டுகளாக முயற்சிகள் எடுத்து, முயன்றார், வெண்றார், என நாளைய சரித்திரம் செப்பும் என்பதற்கு, கண்ணகி தேவி டிரஸ்டே எடுத்துக் காட்டு.

