
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் , ரத்தான இயக்குனர் சங்க செயலாளர், பெப்சி தலைவர் என பல பதவிகளில் இருக்கும் ஆர்.கே.செல்வமணி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் சங்கத்தின் முன்னாள் தலைவர் இயக்குனர் விசு, முன்னாள் செயலாளர் கவிஞர் பிறைசூடன் ஆகியோருக்கும் டிரஸ்ட் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர்கள் சங்கத்தின் பணம் 36 லட்சத்தை விசு, பிறைசூடன் ஆகியோர் கையாடல் செய்து விட்டார்கள் என சங்கத்தின் இப்போதைய தலைவர் பாக்யராஜ் புகார் அளித்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் விசு ஆடியோ மூலம் பாக்யராஜுக்கு பதில் சொல்லி இருந்தார்.

இந்த சூழலில் அந்த சங்கத்தின துணை தலைவர் ஆக உள்ள இயக்குனர் செல்வமணி திடீரென தனக்கு உடல் நலக் குறைவு ஏற்ப்பட்டு, சிறு அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். தொலைபேசியில் யாரும் 2 நாளைக்கு தொடர்பு கொள்ள வேண்டாம். முக்கியமான தகவல் இருந்தால் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் படமாக வைத்திருக்கிறார்.

இதன் மூலம் யாருக்கோ தகவல் தெரிவிக்க இப்படி பதிவு வைத்தாரா… அல்லது எழுத்தாளர்கள் சங்க பஞ்சாயத்து குறித்து மீடியாவையும் அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் தவிர்க்க இந்த ஆஸ்பத்திரி அனுமதியா என்றும் பரபரப்பாக கோடம்பாக்கம் பேசுகிறது.
– கோடங்கி
