சனிக்கிழமை, மே 30
Shadow

மெரீனாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கியது நீதிமன்றம்..!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்ய மெரீனாவில் அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கி தரும்படி அரசுக்கு ஸ்டாலின் கடிதம எழுதினார்.

ஆனால் நீதிமன்றத்தில் பல  வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இடம் அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது.

மேலும், காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

ஆனால் அதை ஏற்க மறுத்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவில் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி இடம் அளிக்க முடியாது என அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்தது.

இந்த நிலையில் மெரீனாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள அனைத்தும் திரும்பப் பெறப்பட்டது.

அதன்பிறகும் முன்னாள் முதல்வர்களுக்கு  மெரீனாவில் இடம் ஒதுக்க முடியாது என அதிமுக அரசு பிடிவாதம் செய்தது.

நீண்ட வாதத்திற்கு பின் மெரீனாவில் அண்ணா நினைவிடத்தில் கலைஞர் அவர்களை அடக்கம் செய்ய அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மெரீனாவில் இடம் பெற்ற உத்தரவு தெரிந்ததும் ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி தொண்டர்களை பார்த்து வணங்கினார்.

 

 

333 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன