புதன்கிழமை, ஜூலை 15
Shadow

ஓசி சோறு வீரமணி – காட்டமான துரை தயாநிதி

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த போது திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதங்கள் நடக்காமல இல்லை.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்றும் விவாதங்கள் நடைபெற்றன.

இந்த சூழலில் கலைஞர் மரணம் இந்த விவாதங்களை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அழகிரி குறித்த கேள்வி ஒன்றுக்கு தி.க.வீரமணி பதில் அளிக்கும் போது “வீட்டில் இருப்பவர்களை பற்றி கேளுங்கள். விருந்துக்கு வந்தவர்களை பற்றி கேட்க வேண்டாம்” என கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அழகிரியின் மகன் துரை தயாநிதி சமூகவலை தளம் மூலமாக காட்டமான பதில் பதிவு செய்திருக்கிறார்.

“காலம் காலமாக திமுக, அதிமுகவில் ஓசி சோறு சாப்பிடும் ஐயா வீரமணி அவர்கள் இதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” என குறிப்பிட்டு திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணியை ஓசி சோறு என்று குறிப்பிட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

1,188 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன