

நான் தலைவர் கலைஞர் இல்லை – அவர் போல பேசத் தெரியாது – அவரைப் போல மொழியை ஆளத் தெரியாது
ஆனால் எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு இருக்கிறது
கலைஞரின் கொள்கை தீபம் கையில் இருப்பது, முப்படையும் நம் கையில் இருப்பதற்கு சமமானது
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என நான் வாழ்வதாக, கலைஞரே என்னை பாராட்டி எழுதியுள்ளார்
என் வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்றுதான் வாழ்வேன்
என்னைவிட திமுக பெரிது – திமுகவும், உதயசூரியனும், கொடியும் எந்த தனிமனிதனையும்விட பெரிது
கலைஞர் இருக்கும்போதே, திமுகவின் அடுத்த தலைவராகும் தகுதி படைத்தவர் மு.க.ஸ்டாலின் என்று முன்மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன்
கலைஞரின் மகன் என்று சொல்லிக் கொள்வதைவிட கலைஞரின் தொண்டன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் ஆனது திமுக எனும் கோட்டை
திமுகவையும், தமிழகத்தையும் புதிய எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறேன்
மத்திய, மாநில அரசுகள் மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும் – மு.க.ஸ்டாலின் ஆகிய நான் இன்று புதிதாய்ப் பிறக்கிறேன் – இது வேறு ஒரு நான்
யார் தவறு செய்தாலும், அது நான் என்றாலும் எதிர்த்துக் குரல் கொடுப்போம்
எதிர்காலம் தூரத்தில் இல்லை – இதோ கனவு மெய்ப்படப் போகிறது
இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா என தொண்டர்களுக்கு அழைப்பு
திமுகதான் என்னுடைய குடும்பம் – அனைவரும் சகோதர, சகோதரிகள் – அனைவரும் தலைமைக்கு ஒன்றுதான் – அனைவரும் சமம்
தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக தொண்டர்கள் இருக்க வேண்டும் – தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தலைமை இருக்கும்

தந்தை பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதை, பெற்றுத்தந்த சமத்துவத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்
திமுக தலைவர் என்ற பெரும் பொறுப்பை என்னுடைய சிறிய இதயத்தில் ஏற்றிவைத்து விட்டு கலைஞர் சென்று விட்டார்
என்னுடைய இதயம் தந்தது கலைஞர் – இந்த இதயம் எதையும் தாங்கும் என்றார் திமுக தலைவர் ஸ்டாாலின்
