செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

செப்டம்பர் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா- தமிழக அரசு அறிவிப்பு

 

 

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது குமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட முடிவு செய்யப்பட்டு விழா நடத்தப்பட்டது.

நிர்வாக காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் விழா நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 22.9.2018 அன்று நடத்தவும் நிறைவு விழாவை அடுத்த மாதம் 30-ந்தேதி அன்று சென்னையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

471 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன