வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: தனுஷ்

டோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம்!

டோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம்! நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து, சம்பளமும் அதிகமாகி உள்ளது. அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க தனுசை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படம் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க நடிகர் தனுசுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இதுவரை வாங்கிய சம்பளத்தி...
தனுஷ் – செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!

தனுஷ் – செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் - செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு! இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்....
190 நாடுகள்… 17 மொழி… ஒரே சுருளி – ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!

190 நாடுகள்… 17 மொழி… ஒரே சுருளி – ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
190 நாடுகள்... 17 மொழி... ஒரே சுருளி - ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்! பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதன்மூலம் முக்கிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் 190 நாடுகளில் ஓடிடி-யில் வெளியாக உள்ளதாம். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலிஷ், போர்ச்சுகீஸ், பி...
‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ்… விரைவில் சென்னை திரும்புகிறார்!

‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ்… விரைவில் சென்னை திரும்புகிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ்... விரைவில் சென்னை திரும்புகிறார்! ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர். இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்...
ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது – இயக்குனரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்!

ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது – இயக்குனரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது - இயக்குனரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்! பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘புஜ்ஜி’ மற்றும் ‘நேத்து’ ஆகிய இரண்டு பாடல்களும் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தின் மொழிமாற்றம் கருதி இந்த இரு பாடல்களை நீக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். மாபெரும் வரவேற்பை பெ...
ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட்!

ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ஜூன் 7 ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்து இருக்கிறார். இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....
தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக எமோஜி வெளியிட்ட டுவிட்டர் – கொண்டாடும் ரசிகர்கள்!

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக எமோஜி வெளியிட்ட டுவிட்டர் – கொண்டாடும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக எமோஜி வெளியிட்ட டுவிட்டர் - கொண்டாடும் ரசிகர்கள்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்திற்காக டுவிட்டரில் சிறப்பு எமோஜி வெளியிடப்பட்டு உள்ளது. தனுஷ் படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதன்முறை. ஜகமே தந்திரம் படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள எமோஜி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல், பிகில், சூர்யாவின் என்.ஜி.கே போன்ற படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டது குறி...
‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ – ஜகமே தந்திரம் !

‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ – ஜகமே தந்திரம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ - ஜகமே தந்திரம் ! பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அதில் தனுஷ் பேசும் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதால் அதிருப்தியில் இருந்த தனுஷ்,...
‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்!

‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்! பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 22-ந் தேதி ‘நேத்து’ என்கிற பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும் என அறிவி...
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்!

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பிற்காக கடந்த ஒரு மாதமாக ஐதராபாத்தில் தங்கி இருந்த ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். விரைவில் டப்பிங் பணிகளில் கலந்துகொள்ள உள்ள அவர், அது முடிந்ததும், அடுத்த மாதம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா சென்று வந்த பின் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராக் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்த பின், நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக புதிய...