சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கனமழை

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளி...
கனமழை எச்சரிக்கை ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

கனமழை எச்சரிக்கை ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கனமழை காரணமாக ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’’ தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல்- 30, மே 1ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் . வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றதழுத்த தாழ்வு மையம் இலங்கை வழியாக தமிழகத்தை கடக்கும்.   28ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். 29ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும். 30, மே-1ம் தேதி தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 115.6 முதல் 204.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப...
தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னையில் மிதமான மழை இருந்தாலும் ஒருசில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ...
கஜா புயல் இன்று கரையை  கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

கஜா புயல் இன்று கரையை கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும்  நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றின் அமைப்பைப் பொருத்து புயலின் வேகம் இருக்கும்.இன்று  மாலை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது அப்போது, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைபெய்யும்....