செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: Trisha

படத்தை விட அதிக சம்பளம்…. வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

படத்தை விட அதிக சம்பளம்…. வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
படத்தை விட அதிக சம்பளம்.... வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்! கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் நடிக்க அவர் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து இன்னொரு வெப் தொடரில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.8 கோடி சம்பளம் கொடுக்க பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா, சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வாங்கினார் என்...
திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்!

திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்! சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் மே 4-ந்தேதியான நேற்று தனது 38ஆவது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார். அவருக்கு அவரது சினிமா நண்பர்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள். இந்நிலையில் திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள நடிகை சார்மி, திரிஷாவின் திருமணம் குறித்தும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், திரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் திரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதை அவர் மறைமுகமாக இப்படி தெரிவித்துள்ளார். நடிகை சார்மியும் திரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது....
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்! எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ராங்கி படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது....
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்! திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த வருடம் மார்ச் மாதமே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. சுமார் ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த இப்படத்தை தற்போது நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்....
திரிஷா நடித்த ‘ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்…

திரிஷா நடித்த ‘ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷா நடித்த 'ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்... திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன. இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்....
மக்களால் வெளியிடப்பட்ட ரஜினிகாந்த் பேட்ட பட  பாடல்கள்..!

மக்களால் வெளியிடப்பட்ட ரஜினிகாந்த் பேட்ட பட பாடல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மக்களால் வெளியிடப்பட்ட ரஜினிகாந்த் பேட்ட பட பாடல்கள்..!.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் மக்களால் வெளியிடப்பட்டது, 8828888028 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பொதுமக்களே பேட்ட திரைப்படத்தின் பாடல்களை வெளியிட...
நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘96’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகா நடித்திருக்கிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள். ஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது. இதையறிந்த கௌரி, நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்...