புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

Tag: ஏ.ஆர்.ரகுமான்.

“இரவின் நிழல்”  டீசர் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்!

“இரவின் நிழல்” டீசர் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
1989-இல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது. வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கினார்கள். சிலர் பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள். பார்த்திபன் தற்போது அந்த படத்தையே எடுத்து முடித்து விட்டார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், ...
ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்!

ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா. தற்போது ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இசைக் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசைக் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ...
ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சிறுமி… வைரலாகும் வீடியோ!

ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சிறுமி… வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சிறுமி... வைரலாகும் வீடியோ! ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான '99 சாங்ஸ்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். தற்போது 'மூப்பிலா தமிழ் தாயே' என்ற பாடலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு சிறுமி ஏ.ஆர்.ரகுமானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலை இந்தி மற்றும் தமிழ் மொழியில் பாடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி, லைக்குகளை குவித்து வருகிறார்கள்....
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்! இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து தனது மகனுடன் செல்பி எடுத்து, அந்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். தாங்கள் இருவரும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட...
சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய தி.மு.க. கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து!

சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய தி.மு.க. கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய தி.மு.க. கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து! தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள தி.மு.க.விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதா...
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைப்பு!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனா பரவல் எதிரொலி... பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைப்பு! ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாத இடைவெளிக்கு பின் கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி, தொடர்ந்து 50 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையடுத்து ஒரு மாதம் இடைவெளி விட்டு அடுத்தக் கட்ட படப்பிடிப்பை இந்த மாதம் ஜெய...
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், ‘99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதர...
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் - ஏ.ஆர்.ரகுமான்! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்' என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ''இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன். சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்...
ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்!

ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்! வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன. குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியது என்றே சொல்லலாம். ஏனெனில் இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இவ்வாறு சினிமாவில் பல்வேறு புதுமைகளை செய்யும் பார்த்திபன், அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரும் இப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை...
“ஆராட்டு” எனும் மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

“ஆராட்டு” எனும் மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
"ஆராட்டு" எனும் மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் காட்சியில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் படமும் இதுதான். இந்நிலையில், தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘ஆராட்டு’ எனும் மலையாள படத்திலும் ஏ.ஆர்.ரகுமான் நடித்து வருகிறார். உன்னிகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடிக்கிறாராம். படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலுடன், ஏ.ஆர்.ரகுமான் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியா...