சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: அஜித்

அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகும் ‘வலிமை’ படக்குழு!

அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகும் ‘வலிமை’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகும் ‘வலிமை’ படக்குழு! நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை கடந்த வாரம் சர்ப்ரைஸாக வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய வலிமை படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறதாம். அதன்படி, வலிமை படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை! கடந்த 1994ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி நடிப்பில் உருவான திரைப்படம் ’பாசமலர்கள்’. இந்த படத்தில் அஜித் மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நடிகை காயத்ரி அதன் பின் ’மெட்டி ஒலி’ சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் பெற்றார். இந்த நிலையில் நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’பாசமலர்கள்’ படத்தில் நடித்தபோது அஜித் மற்றும் படக்குழுவினர்களுடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 27 வருடங்கள் கழித்து அஜித்துடன் நடித்ததை நடிகை காயத்ரி நினைவுகூர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது....
‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’!

‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’! அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை அடுத்த மாதம் படமாக்க உள்ளனர். வலிமை படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகாத நிலையிலும், இப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. வெளியாகவிருக்கும் படங்களுக்கு புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் ஆர்வம் தெரிவிக்கலாம். அப்படி ‘வலிமை’ படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ‘பாகுபலி 2’ சாதனையை வலிமை முறியடித்துள்ளது. இதையடுத்து...
குறுகிய காலத்தில் தயாராகும் அஜித்தின் புதிய படம்!

குறுகிய காலத்தில் தயாராகும் அஜித்தின் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
குறுகிய காலத்தில் தயாராகும் அஜித்தின் புதிய படம்! ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது. அதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தனது அடுத்தபடத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வலிமை படத்துக்கு பின் அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜ...
முடிவை மாற்றிய ‘வலிமை’ படக்குழு!

முடிவை மாற்றிய ‘வலிமை’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முடிவை மாற்றிய ‘வலிமை’ படக்குழு! அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். இந்த காட்சியை படமாக்கியதும் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால், வலிமை படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா விதிமுறைகளால் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே வெளிநாட்டில் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சிக...
வலிமை படத்தில் இருந்து வெளியேறிய நடிகர்கள்!

வலிமை படத்தில் இருந்து வெளியேறிய நடிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை படத்தில் இருந்து வெளியேறிய நடிகர்கள்! எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை ’வலிமை’ படத்தின் எந்த அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடவில்லை. ஆனால், இப்படம் குறித்து ஏதாவது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு ’வலிமை’ படத்திற்காக ஒரு சில காட்சிகளை சீனியர் நடிகர்களை வைத்து படமாக்கினோம்., அதன் தொடர்ச்சியாக அந்த நடிகர்களை படப்பிடிப்பிற்கு அழைத்த போது அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறிவிட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  ...
கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தனர். இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், தற்போது ரூ.25 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வ...
அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்!

அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்! நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. கொரோனா 2-வது அலை பரவலால் அந்த காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் வினோத் இயக்குவதாகவும் போனிகபூர் தயாரிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. 61-வது படத்துக்கான திரைக்கதையை வினோத் தயார் செய்து அஜித்திடம் சொன்னதாகவும் அவருக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடிக்க உள்ள மேலும் 2 படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை சூர்யாவின் சூரரை போற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்குவதாகவும் இன்னொரு படத...
அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏகன் படத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார். நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்....
ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்!

ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்! அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன், மோஷன் போஸ்டரையும் மே 1 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....