வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: விஜய்

விஜய் இல்லாமல் துப்பாக்கி 2-ம் பாகம்… இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு!

விஜய் இல்லாமல் துப்பாக்கி 2-ம் பாகம்… இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் இல்லாமல் துப்பாக்கி 2-ம் பாகம்... இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்த படம் ‘துப்பாக்கி’. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. தற்போது உருவாகி வரும் நடிகர் விஜய்யின் 65-வது படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கத...
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு!

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இது தொடர்பாக பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கில பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ என வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார். மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? என நடிகர் விஜய்க்கு, வன்னி அ...
இன்னும் முடியல… இனிமேதான் ஆரம்பம்… தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு!

இன்னும் முடியல… இனிமேதான் ஆரம்பம்… தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு 2வது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்....
இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த படம் ‘மாஸ்டர்’. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியான இப்படம், மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. இந்த ஆண்டில் திரையரங்கில் வெளியாகி அதிக வசூல் குவித்த படமும் மாஸ்டர் தான். மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்யின் ஜேடி (வாத்தி) கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல...
‘தளபதி 66’ படத்தை உறுதி செய்த பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி!

‘தளபதி 66’ படத்தை உறுதி செய்த பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
 ‘தளபதி 66’ படத்தை உறுதி செய்த பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி! நடிகர் விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இயக்குனர் வம்சி பைடி பல்லி சமீபத்திய பேட்டியில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்...
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் நடிக்கு...
கொரோனாவால் ரிலீஸ் பிளானை மாற்றிய ‘தளபதி 65’ படக்குழு!

கொரோனாவால் ரிலீஸ் பிளானை மாற்றிய ‘தளபதி 65’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனாவால் ரிலீஸ் பிளானை மாற்றிய ‘தளபதி 65’ படக்குழு! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால், ரிலீஸ் ப...
கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு!

கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை - விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கா்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், கொரோனா பொதுமுடக்க காலம் வரை மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் 2 காா்களை இலவசமாக பயன்படுத்த விஜய் ரசிகா் மன்றத்தினா் வழங்கினா். விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவா் சி.எஸ். குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜச...
விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – பிரபல நடிகை!

விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை! 'உன்னை தேடி' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பிறகு, 'ஆனந்த பூங்காற்றே', 'ரோஜா வனம்', 'வெற்றி கொடி கட்டு', 'பேரழகன்', 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' மற்றும் 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தில் "வாழ மீனுக்கு" என்ற ஒரே ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனை 2007-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஒரு நேர்காணலில், தனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது விஜய்யுடன் குருவி படத்தில் 'டண்டானா டர்னா' பாடலில் நடனம் ஆடிய தருணத்தைப் பகிர்ந்துக் கொண்டார். விஜய்யுடன் டான்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அப்போது நான் ...
‘தளபதி 65’ அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ!

‘தளபதி 65’ அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தளபதி 65’ அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமை படக்குழு அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...