சனிக்கிழமை, மே 18
Shadow

அரசியல்

முதல்கட்ட தேர்தல் உ.பி.யில் 60.17 % வாக்குகள் பதிவு..!

முதல்கட்ட தேர்தல் உ.பி.யில் 60.17 % வாக்குகள் பதிவு..!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெற்றது  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது.  மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. இன்று நடந்த  உத்தர பிரதேச  சட்டசபை  தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில்  60.17  சதவீதம் வாக்குகள்  பதிவாகி உள்ளன....
பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் தேசப்பற்று: ஜோதிமணி எம்.பி.!

பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் தேசப்பற்று: ஜோதிமணி எம்.பி.!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிக்கு எதிராக காவித்துண்டு அணிந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், மாணவர்கள் அல்லாத பலபேர் மாணவியை விரட்டும் காட்சியை நாம் பார்த்தோம். இந்த காட்சி, இந்தியா முழுவதும் தீப்பிடித்ததுபோல பரவியுள்ளது. இது தமிழகத்துக்கு வந்துவிட ரொம்ப நாள் ஆகிவிடாது. பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் வடமாநிலங்களில்தான் இப்படி நடக்கும் என்று பலபேர் என்னிடம் தெரிவித்து உள்ளனர். தென் மாநிலத்துக்கு தற்போது வந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில் இப்படி நடக்கவில்லை. ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சம்பவத்துக்கு ஆளான பெண் போல, எல்லா பெண்களும் பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் துணிவோடு எதிர்த்து நிற்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின்...
உத்தர பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

உத்தர பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். பா.ஜனதா, சமாஜ்வாடி-லோக்தளம் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் 53 தொகுதிகள் பா.ஜனதா வசம் உள்ளவை. தலா 2 தொகுதிகள், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வசம் உள்ளவை. ஒரு தொகுதி, ராஷ்டிரீய லோக்தளம் வெற்றி பெற்ற இடமாகும். முசாபர்நகர், மீரட், பாக்பத், காசியாபாத், ஷாம்லி, ஹாபூர், கௌதம் புத்தநகர், புலந்த்ஷாஹர், அலிகார், ஆக்ரா மற்றும் மதுரா உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம்  2 கே...
பர்தா தொடர்பான வழக்கு – கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவு!

பர்தா தொடர்பான வழக்கு – கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித்துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித்துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் கர்நாடகா மாநில கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து கர்நாடகத்தில் 3 தினங்களுக்கு  அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் அணிவதை எதிர...